ஜெயவீரஆஞ்சநேயர் கோயில் மண்டலாபிஷேகம்
ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் மண்டலாபிஷேக விழா, சீதா கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் மண்டலாபிஷேக விழா, சீதா கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர் கீழ 4 ஆம் வீதியிலுள்ள ராஜாகுளம் மேல்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் மண்டலாபிஷேக விழா, சீதா கல்யாண உற்ஸவ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காலையில் ஆலய வளாகத்தில் ஆஞ்சநேயர் மூலமந்திர ஹோமத்துடன் மஹா அபிஷேகம் தீப ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சீதா கல்யாண உற்ஸவம் நடந்தது.
இதில் பெண்கள் கீழ 4 ஆம் வீதி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் சீதா கல்யாண உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். சீதா லெட்சுமண அனுமந் மேத ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி திரு வீதிஉலா பல்வேறு வீதி வழியாக சென்று கோயிலை வந்தடைந்தது. நிகழ்ச்சியினை விழா குழுவினர் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்தனர்.