புதுக்கோட்டை

வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செப்டம்பர் மாதத்துக்கான மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்து,  மாவட்ட வருவாய் நிர்வாகம் தொடர்பான குவாரிகள் ஆய்வு, அங்கன்வாடி ஆய்வு, சத்துணவு மையங்கள் ஆய்வு, திரையரங்கு ஆய்வு, அரசினர் விடுதிகள் ஆய்வு, நிலம் மாற்றம், நில உரிமை மாற்றம், கொடிநாள் வசூல், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், அம்மா திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், பொதுக் கட்டட உரிமம் வழங்குதல், சான்றுகள் நிலுவை இனம் உள்ளிட்ட 65 வகையான பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்  ஆய்வு செய்தார். மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிப்பதில் அனைத்து அலுவலர்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம். சரயு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமாவுக்கு பறந்த சிறகடிக்க ஆசை தொடர் நடிகை!

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

‘தேர்தல் ஆணையத்தின் பெரும் தோல்வி’: உயர்நீதிமன்றம்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பெரும்புள்ளிகள்!

நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்

SCROLL FOR NEXT