சிறுமி ஆஷிபா வன்கொலை: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிபா மரணத்திற்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர்
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிபா மரணத்திற்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பெனட் அந்தோனி ராஜ் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஆஷிபா வன்கொலைக்கு நீதி கேட்டும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். கட்சியின் நகரத் தலைவர் இப்ராகிம்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.