புதுக்கோட்டை

முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு கணினி வழங்கல்

DIN

அறந்தாங்கி அருகே பூவைமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் எஸ்.ராமதாஸ் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இன்வெர்டர் மற்றும் கணினி பாகங்கள் வழங்கினார்.
பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வே.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சி.காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் கே.எல்.சி. மாரிமுத்து, நிர்வாகிகள் குமரேசன், பாலு, கிராமக் குழு  தலைவர் மீனாட்சி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், பள்ளியின் முன்னாள் மாணவரும், அறந்தாங்கி தொழிலதிபருமான எஸ்.ராமதாஸ், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இன்வெர்டர், கணினி மற்றும் பாகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வி.வெள்ளச்சாமி, சு.மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்னவாசலில் அரசுப் பள்ளிக்கு கணினி வழங்கல்:
அன்னவாசல் அருகேயுள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இலவசமாக கணினியை வியாழக்கிழமை வழங்கினார்.  முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற கணினி வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை வகித்தார். தொடர்ந்து முன்னாள் மாணவர் கழக தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் முன்னாள் மாணவர்கள் இணைந்து 
ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கணினியை பள்ளிக்கு வழங்கினர். விழாவில், கிராம கல்விகுழு தலைவர் காஜாமைதீன் அபிபுல்லா மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT