புதுக்கோட்டை

வம்பன் வேளாண் நிலையத்தில் மண்வளப் பாதுகாப்பு முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண் வள தின நிகழ்ச்சி மற்றும் ராபி முன் பருவ விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
முகாமில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி கிராமிய வேளாண் பணி அனுபவ திட்ட 4ஆம் ஆண்டு மாணவிகளின் கருத்து காட்சி விளக்கம் நடைபெற்றது.  தொடர்ந்து விவசாயிகளின் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை சுவாமிநாதன் மண் வளத்தைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும், ராபி முன்பருவ வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசினார்.  
இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.  விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் நெல்சன் நவமணிராஜா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT