புதுக்கோட்டை

மர்மக் காய்ச்சல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சாவு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் துரைராசு. குன்றாண்டார்கோயில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். இவரது மனைவி மலர்விழி(50)  ஆலங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மலர்விழிக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். காய்ச்சல் மேலும் தீவிரமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மலர்விழி செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT