புதுக்கோட்டை

அரியாணிப்பட்டி கருப்பர், முத்துமாரியம்மன்கோயில் திருவிழா

DIN

கந்தர்வகோட்டை ஒன்றியம் அரியாணிப்பட்டியில் உள்ள கருப்பர் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு  சுவாமிகளுக்கு மஞ்சள்,  திரவியம், பால், பன்னீர், இளநீர் அபிஷேகங்களும்,  தீபாராதனைகள் நடைபெற்று சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 
மேலும், கருப்புசுவாமிக்கு பக்தர்களால் நேர்ந்து விடப்பட்ட காளைகளை கோயில் வளாகத்தில் அவிழ்த்துவிடப்பட்டன. பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவில், புனல்குளம், கொத்தம்பட்டி, காடவராயன்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள்,  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அரியாணிப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT