புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

DIN

குடிநீர் விநியோகத்தை சீராக வழங்கக்கோரி விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை  செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
விராலிமலை அருகேயுள்ள கசவனூரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
இவர்களது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவந்த 4 ஆழ்துளை கிணறு தூர்ந்து விட்டதால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில்  குடிநீரை சேமித்து விநியோகம் செய்யப்படாத நிலை தற்போது நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 
இதனால் அப்பகுதி பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கியும் தங்களது குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனராம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கசவனூர் கிராம பொதுமக்கள் 
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி காலை விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்து அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த மண்டல துணை ஆணையர் சுமதி, பழைய ஆழ்குழாய் கிணற்றை உடனடியாக தூர்வாரியும் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT