புதுக்கோட்டை

அறந்தாங்கியில் மார்கழி மாத பாவை உலா நிறைவு

DIN

அறந்தாங்கியில் மார்கழி மாதம் முழுவதும் வலம் வந்த சிவனடியார் திருக்கூட்ட பாவை உலா சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
அறந்தாங்கி கோட்டை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து மார்கழி மாதம் தினமும் அதிகாலையில் பஜனையுடன் பாசுரங்கள் பாடிச் செல்லும் சிவனடியார்கள் நான்கு வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தில் முடிப்பது இயல்பு.
மார்கழி மாத கடைசி நாளான சனிக்கிழமை சிவனடியார்கள் புலவர் ரெங்கையன்,
புலவர் ராதாகிருஷ்ணன், சிவ.பிரபாகரன், வீ.வீரமாகாளியப்பன், இராம. தாமரைச்செல்வன் மற்றும் பல சிவனடியார்கள் ஆழ்வார், ஆண்டாள் பாசுரங்களைப் பாடியும் சங்கு ஊதியும் உலா வந்தார்கள். பல வீடுகளின் வாசலில் குடும்பத்துடன் அதிகாலையில் நின்றிருந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு பொன்னாடி போர்த்தி வணங்கினார்கள். சிவனடியார்கள் அவர்களுக்கு திருநீறு வழங்கி குடும்பம் செழிக்க வாழ்த்தினார்கள். பல இல்லங்களில் பயறு பாயாசம், பால் வழங்கப்பட்டது. மார்கழி மாதம் முழுவதும் வலம் வந்த பாவை உலா சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை!

சசி தரூர் பின்னடைவு!

கே.கே. ஷைலஜா பின்னடைவு!

கர்நாடகம்: காங். பெரும் பின்னடைவு!

SCROLL FOR NEXT