முகப்பு
புதுக்கோட்டை

காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய இளைஞர் கைது

ஆலங்குடி அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:46 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஆலங்குடி அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
 சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாதன்(56), தற்போது பேராவூரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் பேராவூரணிக்கு திரும்பினார். திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வேகத்தடை அருகே மதுபோதையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் காரை வழிமறித்து தகராறு செய்தனர்.
 இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் இருந்தவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். 
இதில்  கோபிநாதன், அவரது மகன் சதீஷ்குமார்(24) ஆகியோர் காயமடைந்தனர்.  இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் கோபிநாதன் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரனை நடத்திய போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட திருவரங்குளத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மணிகண்டனைக்(24) கைது செய்தனர். தலைமறைவான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.