ஏம்பல் கிராமத்தில் மாசிமக தேரோட்டம்
ஆவுடையார்கோவில் அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் முத்தையா சுவாமி கோயில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் முத்தையா சுவாமி கோயில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த 20 -ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள், மாகாணத்தாரின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான புதன்கிழமை காலை 9-ம் நாள் தேரோட்டத்தை முன்னிட்டு முத்தையா சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி ஏம்பல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்த தேர் நிலைக்கு வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.