முகப்பு
புதுக்கோட்டை

ஒளிரும் புதிய மத்தாப்புகள் கடைசியில் சாம்பலாகும்

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் கட்சிகள் ஒளிரும் மத்தாப்புகள், கடைசியில் அவை சாம்பலாகத்தான் போகும்,

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் கட்சிகள் ஒளிரும் மத்தாப்புகள், கடைசியில் அவை சாம்பலாகத்தான் போகும்,  அதிமுக எப்போதும் இரும்புக்கோட்டை என்றார் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
ஒன்றியச் செயலர் ஆர். ரெங்கராஜன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் பி. கே . வைரமுத்து முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மேலும் பேசுகையில், பல்வேறு தரப்பினருக்கும் நலத் திட்டங்களை வாரி வழங்கி மறைந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் புதிது புதிதாக ஒளிரும் மத்தாப்புக்கள் சில மணி துளிகள் வண்ணம் காட்டும். கடைசியாக சாம்பலாக மண்ணோடு மண்ணாகும் என்றார். மாவட்ட மாணவரணிச் செயலர் பி. பாண்டியன், ஒன்றிய துணைச் செயலர் யு. குமார், கே. எம். முத்து , எம். ஆனந்தகுமார், ஆர். எஸ். முத்துக்குமார், எஸ். சாத்தார், எம். பெரியசாமி, அய்யா. செந்தில்குமார், பிரான்ஸிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →