கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு
பொன்னமராவதி அருகே இடையாத்தூர் அம்பாள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
பொன்னமராவதி அருகே இடையாத்தூர் அம்பாள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தேனூர் அணியும், இரண்டாமிடத்தை பொன்னமராவதி அணி, மூன்றாமிடத்தை அம்பாள்புரம் அணி, நான்காமிடத்தை நெய்வேலி அணியினர் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.