புதுக்கோட்டை

அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள்

DIN

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினர்.
புதுகையில் உள்ள அண்ணாசிலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் நகரச்செயலர் பாஸ்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் அக்கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொருப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில் அக்கட்சியின் நகரச்செயலாளர் அக்கட்சியின் நகரச்செயலர் வீரமணி தலைமையிலானோரும், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அறந்தாங்கி: அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலையிலிருந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு,.ராஜநாயகம் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான எஸ்.ரகுபதி தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், நகரச் செயலாளர் இரா.ஆனந்த் ஆகியோர் கலைஞர் மன்றத்திலிருந்து ஊர்வலமாக வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அமமுக சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் த.செல்வராஜ் தலைமையில் மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில் நகரச்செயலாளர் மு.மணிகாந்த் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். திராவிடர் கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் மரியாதை செய்தனர்.
பொன்னமராவதி: அதிமுக கட்சி அலுவலகத்தில் அண்ணா திருவுருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலர் ராம.பழனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் கணேசன் கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஆர்எம்.ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் வை.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT