புதுக்கோட்டை

ரூ. 1.36 லட்சம் ரொக்கம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை நகரில் புதன்கிழமை அதிகாலை தேர்தல் பறக்கும் படை குழுவினர் நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ. 1.36 லட்சம் ரொக்கம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை நகரின் நுழைவுவாயிலான கருவப்பில்லான்கேட் பகுதியில் ஆவுடையார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் லதா பேபி, சிறப்பு உதவி ஆய்வாளர் சமுத்திரம் ஆகியோரைக் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். புதன்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் வந்த வேன் ஒன்றை சோதனையிட்டபோது அதில் 
ரூ. 1.36 லட்சம் ரொக்கம் இருந்தது. 
ரொக்கப் பணத்தை புதுக்கோட்டை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான தண்டாயுதபாணியிடமும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் காவல் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், பணம் மற்றும் புகையிலைப் பொருட்கள் எடுத்து வந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த எ. அனந்தராமன் மற்றும் ஓட்டுநர் ராமேசுவரத்தைச் சேர்ந்த இ. குமரேசன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT