புதுக்கோட்டை

புலவனார்குடியில்  பொதுமக்கள் சாலை மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அருகிலுள்ள புலவனார்குடியில்  குடிநீர் விநியோகம் தடைபட்டதை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இக்கிராமத்திலுள்ள தெருக்களில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து  ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், திங்கள்கிழமை காலை பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!

மோடி தலைமையில் இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

பிரதமர் போட்டியிலிருந்து மோடி விலக வேண்டும்: அசோக் கெலாட்

SCROLL FOR NEXT