புதுக்கோட்டை

அறந்தாங்கி பச்சைக்காளி அம்மன் வீதி உலா

DIN


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருள்மிகு பிள்ளைதாச்சியம்மன், பச்சைகாளியம்மன் திருக்கோயில்  சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்று செவ்வாய்கிழமை காப்புகட்டி திருவிழா துவங்கியது. முதல் நாள் பாரதியார்தெரு, கள்ளிசந்து, கள்ளிசந்து 2-ம் வீதி, எக்ஸல் தியேட்டர் முதல் தண்டாயுதபாணி மில் வரை திருவிழா நடைபெற்றது. சுவாமி வீதிஉலா, மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை 2 ஆம் நாள் மண்டகப்படிதாரர்களான புதுத்தெரு, பெரியார் தெரு, களப்பக்காடு, என்.ஜி.ஓ காலனி, மீனாம்பாள் நகர்  உள்ளிட்ட பகுதி மக்களின் சார்பில் நடைபெற்ற திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வீதி உலா நடைபெற்றது.
வியாழக்கிழமை 3 ஆம் நாள் மணடகப்படிதாரர்களான எழில்நகர், கெங்காதரபுரம், மாநாட்டு திடல், தாரணி நகர் பட்டுக்கோட்டை சாலை பகுதிவாழ் மக்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. இரவு வீதிஉலா நடைபெற்றது. இப்பகுதி மக்கள் ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT