புதுக்கோட்டை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவித் திட்டங்கள்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மேம்பாட்டுக்காக தோட்டக்கலைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கூறியது:
தோட்டக்கலைத் துறையின் மூலம் கஜா வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வாழை, மா,  எலுமிச்சை, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, பப்பாளி, முந்திரி மற்றும் காய்கறிப் பயிர் சாகுபடி செய்ய 10,881 விவசாயிகளுக்கு 6002.20 ஹெக்டேர் பரபப்பளவில் ரூ.12.57 கோடி இலக்கீடு பெறப்பட்டு, அதில் 1,982 ஹெக்டேர் பரப்பளவில் 4,709 விவசாயிகளுக்கு வாழை மற்றும் காய்கறிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 
முந்திரி பழைய தோப்பு புதுப்பித்தல் மற்றும் பரப்பு விரிவாக்கம் செய்வதற்கு  நடவுச்செடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வாழைப்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.26,250 மதிப்பில் மானியம் மற்றும் இடுபொருள் வழங்கப்படுகிறது. மா பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,120 பலா பயிருக்கு ரூ.14,400, எலுமிச்சைப் பயிருக்கு ரூ.13,195, கொய்யா பயிருக்கு ரூ.9,201, காய்கறிப் பயிருக்கு ரூ.20 ஆயிரம், சம்மங்கி பயிருக்கு ரூ.60 ஆயிரம், மலர் வகைப் பயிருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் செடிகளும், இடுபொருள்களும் மானியமாக வழங்கப்படுகின்றன.  இதுதவிர 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.93.50 லட்சம் மானியத்தில் பசுமைக்குடில் அமைப்பதற்கு இலக்கீடு பெறப்பட்டு பணி ஆணை வழங்கி பணி நடைபெற்று வருகின்றது. மேலும், புதிதாக பசுமைக்குடில்  அமைக்கவுள்ள விவசாயிகளும் 50 சதவிகித மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
அனைத்து விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கு 1,481 ஹெக்டேர் பரப்பளவில் 1,857 விவசாயிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. 
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்கள், உதவி இயக்குநர்களை அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT