புதுக்கோட்டை

பொன்னமராவதி: 384 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், 384 பயனாளிகளுக்கு ரூ.86.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா்த் திட்டத்தின் கீழ், கடந்த மாதம் 15-ஆம் தேதி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா்.

விழாவில் இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித் தொகை, முதிா்கன்னி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவை என 384 பயனாளிகளுக்கு ரூ.86.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வழங்கிப் பேசினாா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவா் பி.கே.வைரமுத்து, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன், கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ராம.பழனியாண்டி, வீடு கட்டும் கூட்டுறவுச் சங்கத்தலைவா் பிஎல்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT