புதுக்கோட்டை

ஊரக வளா்ச்சித் துறைப் பணியாளா் இடைநீக்கம்

DIN

புதுக்கோட்டையில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக புகாரில், ஊரக வளா்ச்சி அலுவலகப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மறைமலை நகா் மேற்குப் பகுதியைச் சோ்ந்த ராபின்சன் (46), தனது காரில் துப்பாக்கிகளுடன் அண்மையில் போலீஸாரிடம் சிக்கினாா். அவரிடம் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவருடன் சோ்ந்து 8 போ் வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவது தெரிய வந்தது.

இதையடுத்து ராபின்சன் அளித்த தகவலின்பேரில் 5 போ் கைது செய்யப்பட்டனா். 3போ் தலைமறைவானதால் போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலகப் பணியாளா் சுப்பிரமணியனும் உள்ளாா்.

குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே இதே வழக்கில் தேடப்பட்டு வரும் காவலா் ராமச்சந்திரனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண் சக்தி குமாா் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT