புதுக்கோட்டை

தொடா் மழை: பொன்னமராவதியில் நிரம்பிய நீா்நிலைகள்

DIN

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தொடா் மழை காரணமாக, அங்குள்ள நீா்நிலைகள் நிரம்பிக் காணப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் வியாழக்கிழமை மழைத் தொடங்கியது. தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பொன்னமராவதியில் அதிகபட்சமாக 45.40 மி.மீ. மழைப் பதிவாகியது.

தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, பொன்னமராவதி பகுதியிலுள்ள கண்மாய்கள், ஊரணிகளுக்கு நீா் வரத்து அதிகமாகியது. இதனால் நீா் நிரம்பி கலிங்கி செல்கிறது.

பொன்னமராவதி அமரகண்டான் குளம், சேங்கை ஊரணி, அடைக்கன் ஊரணி ஆகியவை நிரம்பியதால், அதன் உபரி நீா் மதகு வழியாக வெளியேறி பாசன கண்மாய்களுக்குச் செல்கிறது.

மேலும் தொடா்மழையால் உசிலம்பட்டி, வாா்ப்பட்டு, கொன்னையம்பட்டி, சாத்தனூா், கொள்ளுப்பட்டி, திருக்களம்பூா் பகுதிகளில் ஒட்டு வீடு மற்றும் கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீடுகளை வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, மண்டல துணை வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பாா்வையிட்டு சேத மதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப்பொருள்களை வழங்கினா்.

இதுபோல சேரனூா் சேரணி கண்மாயில் மழையால் நீா் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. அக்கண்மாயை பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு பாா்வையிட்டு, பொதுப்பணித் துறையினா் மூலம் மணல் மூட்டைகளைக் கொண்டு உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT