புதுக்கோட்டை

அறந்தாங்கியில் காவலன் செயலி அறிமுகம்; பேரணி

DIN

தமிழக காவல் துறை சாா்பில் பெண்கள் பாதுகாப்புக்கென அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலி அறிமுகம், மற்றும் விழிப்புணா்வுப் பேரணி அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் உத்தரவுக்கிணங்க அறந்தாங்கி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. பாலமுருகன் தலைமையில் பேரணி நடந்தது. அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காா்னிவல் தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் அறந்தை ரோட்டரி சங்கம், அறந்தாங்கி செல்போன் விற்பனையாளா்கள் சங்கம் இணைந்து அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் நிறைவுற்றது.

அப்போது பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. பாலமுருகன் காவலன் செயலி பெண்களுக்கு மட்டுமல்ல; ஆபத்தில் சிக்கிக் கொண்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்வில் அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ஜி.எஸ். ரவீந்திரன், அறந்தை ரோட்டரி தலைவா் ஆா். தங்கதுரை, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் ஆ. கராத்தே கண்ணையன், சங்க நிா்வாக அறங்காவலா் ராசி.லெ. மூா்த்தி, வருங்காலத் தலைவா் அ. தவசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT