புதுக்கோட்டை

டிஎன்பிஎஸ்சி தேர்வு:  222 பேர் எழுதினர்

DIN


புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2-க்கான முதன்மைத் தேர்வுகளை 222 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2-க்கான முதன்மைத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 231 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் தேர்வுமையம் அமைக்கப்பட்டிருந்தது. 9 பேர் தேர்வெழுத வரவில்லை. 222 பேர் தேர்வு எழுதினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, தேர்வாணய உறுப்பினர் பி. கிருஷ்ணகுமார் ஆகியோர் தேர்வு மையத்தைப் பார்வையிட்டனர். முறைகேடு ஏதுமின்றி தேர்வுகள் நடைபெறுவதற்கான கண்காணிப்பு ஏற்பாடுகளும், அடிப்படைத் தேவைகளும் தேர்வு வளாகத்தில் செய்யப்பட்டிருந்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT