புதுக்கோட்டை

ஆன்மிக நூல்கள் வெளியீட்டு விழா

DIN

ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ்  சார்பில் ஆன்மிக நூல்கள் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்க குளிர்மை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பேராசிரியர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.பேராசிரியர்கள் வ.பழன்யா, ப.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செண்பகத் தமிழ் அரங்கின் பொறுப்பாளர் இராச.இளங்கோவன் வரவேற்று பேசினார்.
விழாவில், முனைவர் ப.வேங்கடேசன் எழுதிய, அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் பதிகத்தை  ஈ.வே.ரா கல்லூரியின் கணிதத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்.ப.தமிழ்மணியும், மலைக்கோட்டை அருள்மிகு உச்சி விநாயகர் பதிகத்தை  தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சு.ஆனந்தன் பிள்ளையும் வெளியிட்டனர்.நூலை ஆய்வு செய்து பேராசிரியர் சு.செயலாபதியும், அகில இந்திய திருச்சி வானொலி நிலைய பணி ஓய்வு பெற்ற இசையமைப்பாளர் நெல்லை ஆ.சுப்பிரமணியனும் பேசினர்.
 நிறைவாக நூலாசிரியர் ப.வேங்கடேசன் ஏற்புரையாற்றினார்.பேராசிரியர். அ.கோபிநாத் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT