புதுக்கோட்டை

முந்திரி சாகுபடி கருத்தரங்கு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள  வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் முந்திரி சாகுபடி குறித்த கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. 
கருத்தரங்கத்துக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா தலைமை வகித்தார். 
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியது:
முந்திரியை சிறந்த முறையில் பராமரிக்க சொட்டு நீர்ப்பாசனம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும் சிறந்த ரகங்களை நடவு செய்தால் அதிக பலனை அடைய முடியும்.  நமது மாவட்டத்தில் முந்திரி தோட்டங்களை பெரும்பாலும் விதை மூலம் உற்பத்தி செய்த கன்றுகளை கொண்டு நடப்பட்டவையாகும் என்றார்.  இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் தனலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT