புதுக்கோட்டை

முறையற்ற வேகத் தடைகள்; வாகன ஓட்டிகள் அவதி

DIN

கந்தர்வகோட்டையில்  முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளால் வாகனங்கள் பழுதடைவதாக புகார் எழுந்துள்ளது.
கந்தர்வகோட்டை ஊராட்சியில் பேருந்து நிலையம் முன் திருச்சி சாலையில் இருந்த பழைய வேகத்தடை  சில நாள்களுக்கு முன் அப்புறப்படுத்திவிட்டு , புதிய வேகத்தடை சுமார் 2 அடி உயரத்திலும் , 2 அடிக்கும் மேலான அகலத்திலும் கற்களால் அமைக்கப்பட்டது.  இந்த வேகத்தடையைத் தாண்டும் கனரக வாகனங்களின் சக்கரங்கள் முறிந்தும் , அடிப் பட்டைகள், ஸ்பிரிங்குகள் உடைந்து வாகனங்கள் நகர முடியாமல் அதே இடத்தில் நின்று விடுகின்றன, இவ்வாறு பழுதடையும் வாகனங்களை சரி செய்ய 2 நாள்கள் ஆகுமென்பதால்  இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  மேலும் வாகன உரிமையாளர்களுக்கு பண நஷ்டமும் ஏற்படுகின்றன. 
இதேபோல வேகத்தடை கந்தர்வகோட்டை காந்திசிலை அருகே பட்டுக்கோட்டை சாலையிலும் உள்ளது. எனவே முறையான வேகதடையை அமைத்து கனரக வாகனங்களையும் , போக்குவரத்து பாதிப்பையும் சரிசெய்ய வேண்டுமாய் வாகன  வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT