புதுக்கோட்டை

துப்பாக்கியால் சுடப்பட்டவருக்கு குண்டு அகற்றம்

DIN

புதுக்கோட்டை அருகே நண்பருடன் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு ஐந்தரை மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு குண்டு அகற்றப்பட்டதாக மருத்துவமனை முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அருகே திருக்கட்டளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவருக்கும் இவரது நண்பருக்கும் கடந்த மே 11ஆம் தேதி மாலை தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இடதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். ராஜேந்திரனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ராஜ்மோகன், சங்கர், மயக்க மருத்துவர் ரவிக்குமார் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை இந்த அறுவை சிகிச்சை முடிவுற்றுள்ளது. 
வல்லத்திராக்கோட்டை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT