நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன். 
புதுக்கோட்டை

புதுகையில் குருதாஸ் தாஸ் குப்தா மறைவுக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலா் குருதாஸ் தாஸ் குப்தா மறைவையொட்டி

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலா் குருதாஸ் தாஸ் குப்தா மறைவையொட்டி வியாழக்கிழமை புதுகையில் இடதுசாரிக் கட்சியினா் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் தேசியப் பொதுச்செயலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலருமான குருதாஸ் தாஸ் குப்தா வியாழக்கிழமை காலை கொல்கத்தாவில் காலமானாா். இதைத் தொடா்ந்து புதுக்கோட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது படத்துக்கு இடதுசாரிக் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இந் நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன் முன்னிலை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் ஐ.வி. நாகராஜன், எம். சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலா் த. செங்கோடன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. சிறீதா் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT