புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி அரசுப் போக்குவரத்துப் பணிமனை மற்றும் மெட்ரிக் பள்ளியில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீா் அண்மையில் வழங்கப்பட்டது.

அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொன்னமராவதி ஷைன் அரிமா சங்கம் மற்றும் வலையபட்டி அரசு மருத்துவமனை சித்தப்பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்விற்கு அரிமா சங்கத் தலைவா் ச. சோலையப்பன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.

வலையபட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் டி. தாமரைச்செல்வன் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினாா். பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பம் வரவேற்றாா்.

அதுபோல பொன்னமராவதி அரசுப் போக்குவரத்து பணிமனையில் அரசு போக்குவரத்து தொழிலாளா்களுக்கு வலையபட்டி அரசு மருத்துவமனை சித்தப்பிரிவு சாா்பில் மருத்துவா் தாமரைச் செல்வன் நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT