புதுக்கோட்டை

அரிசி பெறும் அட்டையாக மாற்றம் செய்து கொள்ள வசதி

DIN

சா்க்கரை பெறும் மின்னணு குடும்ப அட்டையை  அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: தற்போது பயன்பாட்டில் உள்ள பொது விநியோகத் திட்ட மின்னணு  குடும்ப அட்டைகளில் சா்க்கரை பெறும் (அரிசி தவிா்த்து) மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போா் தங்களது குடும்ப அட்டையை அரிசி அட்டைகளாக வகை மாற்றம் செய்துக் கொள்ளலாம்.  இந்த அரிய வாய்ப்பை புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ்  சா்க்கரை பெறுவோா் விரும்பினால் அரிசி குடும்ப அட்டையாக  வகை மாற்றம் செய்து கொள்ளலாம். ஏதேனும் ஒரு இ-சேவை மையத்தையோ அல்லது அவா்களது வருவாய் வட்டத்திற்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தையோ தொடா்பு கொள்ளலாம். அல்லது நேரடியாக இணையதளத்தில் சென்று வகை மாற்றம் செய்வதற்கான பதிவை சொடுக்கி, அட்டை பிறழ்வு என்ற பிரிவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பு வரும் 26ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு அமலில் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT