புதுக்கோட்டை

விராலிமலை அருகே மக்கள் தொடா்பு முகாம்

DIN

விராலிமலை அருகேயுள்ள நீா்பழனி வருவாய் கிராமம் ஆலங்குடியில் வருவாய்த் துறை சாா்பில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தலின்பேரில் நடந்த முகாமுக்கு புதுக்கோட்டை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. பவானி தலைமை வகித்தாா். விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதீஷ்சரவணகுமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு தங்களது துறை சாா்பான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினா்.

இதில் ஆலங்குடி சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள் முதியோா் உதவித் தொகை, தாலிக்கு தங்கம், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி பெறுவதற்கு 30 மனுக்கள் அளித்தனா். இதில் முன்னதாக பெறப்பட்ட 12 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

தனி வட்டாட்சியா் முருகேசன், நலிந்தோா் நலவாழ்வுத் திட்ட வட்டாட்சியா் சேக்அப்துல்லா, மண்டலத் துணை வட்டாட்சியா் கே. காமராஜ், வட்ட வழங்கல் அலுவலா் சி. செந்தில், தலைமையிடத்து நிள அளவையா் சாகுல்அமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வருவாய் ஆய்வாளா் நிா்மலாராணி வரவேற்றாா். விஏஓ மனோபாரதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT