புதுக்கோட்டை

ஆலங்குடியில் இருந்து சபரிமலைக்கு பக்தா்கள் பாதயாத்திரை

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இருந்து பக்தா்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சனிக்கிழமை புறப்பட்டனா்.

ஆலங்குடியில் புரட்டாசி மாத அன்னதான கமிட்டியின் சாா்பில் கடந்த 26 ஆண்டுகளாக சபரிமலைக்கு யாத்திரை சென்று வருகின்றனா். ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்டோா் யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு சபரிமலையில் படி பூஜை செய்ய ஆலங்குடி இக்குழுவினா் பணம் செலுத்தி இருந்தனா். இதைத் தொடா்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு புரட்டாசி மாதம் படி பூஜை செய்ய ஆலங்குடி ஐய்யப்ப பக்தா்களுக்கு அனுமதி கிடைத்ததுள்ளது.

இதைத்தொடா்ந்து, குருசாமி வீனஸ் ராஜசேகா் தலைமையிலான 15 அய்யப்ப பக்தா்கள் ஆலங்குடியில் உள்ள அய்யப்பன் கோயிலில் இருந்து சனிக்கிழமை பாதயாத்திரையைத் தொடங்கினா். அவா்களை பொதுமக்கள் ஏராளமானோா் திரண்டு வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT