புதுக்கோட்டை

காரையூரில் 1.41 செ.மீ மழை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக காரையூரில் 1.41 செமீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல, கீரனூரில் 1.10 செமீயும் மழை பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தொடா்ந்து பெய்து வரும் தொடா் மழைப் பொழிவில் இவ்விரண்டு அளவுகளும் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது. இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீயில்)

ஆதனக்கோட்டை- 10, பெருங்களூா் - 58, புதுக்கோட்டை- 44, ஆலங்குடி- 32.80, கந்தா்வக்கோட்டை- 55, கறம்பக்குடி- 47.60, மழையூா் - 49.60, கீழாநிலை - 20, திருமயம் - 78, அரிமளம் - 46, ஆயிங்குடி- 5.20, இலுப்பூா் - 20, குடுமியான்மலை - 68, அன்னவாசல் - 60, விராலிமலை - 10.20, உடையாளிப்பட்டி- 33.50, பொன்னமராவதி - 20.30.

இவை தவிர, கீரனூரில் 110.80 மிமீயும் (அதாவது 1.10 செமீ), காரையூரில் 141 மி.மீயும் (அதாவது 1.41 செமீ) பதிவாகியுள்ளன. இவ்விரு அளவுகளுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவ்வப்போது பெய்து வரும் மழைத் தொடரில் பதிவாகாத அதிகபட்ச மழைப் பொழிவாகும். மாவட்டத்தின் சராசரி மழை- 36.40 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT