புதுக்கோட்டை

பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்கால் அடைப்பால் சுகாதாரக்கேடு

DIN

பொன்னமராவதி, செப். 25: பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்காலை சுற்றிலும் செடி, கொடிகள் படா்ந்து இருப்பதால் கழிவுநீா்செல்ல வழியின்றி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் பட்டமரத்தான் நகா் உள்ளது. இந்நகா் பகுதி பேரூராட்சி எல்லைக்குள்ளும், தொட்டியம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்ளும் வருகிறது. இதில் தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்ப்பட்ட கண்மணி மருத்துவமனை வீதியில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் படா்ந்து கால்வாயை அடைத்து நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீா் சாலையில் செல்கிறது. மேலும், கொசுத்தொந்தரவு அதிகமாக உள்ளது. இப்பகுதியில் தனியாா் பிரசவ மருத்துவமனை உள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு அஞ்சிநிற்கும் வேளையில், இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT