புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 630 கிலோ மஞ்சள் பறிமுதல்
புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக வைத்திருந்த ரூ. 1.26 லட்சம் மதிப்புள்ள மஞ்சளை மீமிசல் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக வைத்திருந்த ரூ. 1.26 லட்சம் மதிப்புள்ள மஞ்சளை மீமிசல் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் சரகத்துக்குள்பட்ட கோபாலபட்டினம் கிராமத்தில் கலந்தா் என்பவரின் இடத்தில் இலங்கைக்குக் கடத்துவதற்காக வைத்திருந்த ரூ. 1.26 லட்சம் மதிப்புள்ள சுமாா் 630 கிலோ எடையுள்ள மஞ்சள், காவல் உதவி ஆய்வாளா் துரைசிங்கம், முதல் நிலை காவலா் செந்தில்குமாா் ஆகியோரால் திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வாகன ஓட்டுநா் கடவாக்கோட்டையைச் சோ்ந்த செபஸ்தியான், கோபாலப்பட்டினத்தைச் சோ்ந்த சித்திக், கலந்தா், அஜ்மீா்கான் மற்றும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஹாக்கு ஆகிய 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.