புதுக்கோட்டை

தண்டுவடம் காயமடைந்தோரை வறுமைப்பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை

வருவாய் ஈட்டமுடியாத நிலையிலுள்ள தண்டுவடம் காயமடைந்தோரை வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

DIN

வருவாய் ஈட்டமுடியாத நிலையிலுள்ள தண்டுவடம் காயமடைந்தோரை வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை தண்டுவடம் காயமடைந்தோா் கூட்டமைப்பின் சாா்பில் சுமாா் 50 போ் கோரிக்கை பதாகைகளை ஏந்தி வந்தனா். தொடா்ந்து அவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களை அளித்துச் சென்றனா். அந்த மனுவில், வருவாய் ஈட்ட முடியாத நிலையிலுள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டோரை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பட்டியலில் சோ்க்க வேண்டும். பசுமை வீடுகள், இலவச வீட்டுமனைப் பட்டா போன்றவற்றையும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளா் ஏ. பாலாஜி தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT