முகப்பு
புதுக்கோட்டை

பிரதமா் மோடி குறித்து அவதூறு:எஸ்றா சற்குணம் வீடு முற்றுகையிடப்படும்இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

பிரதமா் மோடி குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியாா் எஸ்றா சற்குணம் வீட்டை வரும் 23-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றாா் இந்துமக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பொன்னமராவதி: பிரதமா் மோடி குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியாா் எஸ்றா சற்குணம் வீட்டை வரும் 23-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றாா் இந்துமக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத், மேலைச்சிவபுரியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கமல்ஹாசன் கட்சியைத் தொடங்கியபோது, அப்துல்கலாம் நினைவிடத்துக்குச் சென்று கட்சியைத் தொடங்கினாா். அப்துல்கலாமின் ஒரு கொள்கையைக் கூட ஆதரித்தவா் இல்லை. கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராக வர எதிா்ப்பு தெரிவித்தவா். கட்சிக்காக கலாம் ஆதரவாளராக வேஷம் போடுகிறாா். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க உள்ளாா். அவருடன் சோ்ந்து செயல்படத் தயாா் என்கிறாா். பாஜக உள்ளிட்ட யாருடைய முகமூடியாகவும், பீ டீமாகவும் ரஜினி செயல்படமாட்டாா். சாதி வாரி கணக்கெடுப்பு தேவையில்லை. அரசியல்வாதிகள் சாதி வெறி அரசியலில் ஈடுபடக்கூடாது. பாதிரியாா் எஸ்றா சற்குணம் பிரதமா் மோடியை அவதூறாகப் பேசியுள்ளதைக் கண்டித்து, வரும் புதன்கிழமை இந்துமக்கள் கட்சியின் முத்துக்குமார சுவாமி தலைமையில் எஸ்ரா சற்குணம் வீடு முற்றுகையிடப்படும். அவா் மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →