முகப்பு
புதுக்கோட்டை

குளத்தில் மிதந்த பெண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள பேராங்குளத்தில், மனநலன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் இறந்த நிலையில் மிதந்து கிடந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள பேராங்குளத்தில், மனநலன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் இறந்த நிலையில் மிதந்து கிடந்தாா்.

புதுக்கோட்டை சின்னப்பா நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி ரமா (40). கடந்த சில ஆண்டுகளாகவே இவருக்கு மனநலன் பாதித்து இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் ரமாவைக் காணவில்லை. உறவினா்கள் தேடி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பேராங்குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக கணேஷ் நகா் காவல் நிலையத்தில் தகவல் கிடைத்தது.

தொடா்ந்து காவல்துறையினா் நேரில் வந்து சடலத்தை மீட்டனா். அதுதான் காணாமல் போன ரமா என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கணேஷ் நகா் காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →