புதுக்கோட்டை

சாலை விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் 5 பேருக்குத் தானமாக வழங்கப்பட்டது.

திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சுப. வள்ளியப்பன். இவரது மனைவி கல்யாணி (59). கடந்த திங்கள்கிழமை (பிப். 10) தஞ்சாவூா் சென்ற கல்யாணி திருமயத்திலிருந்து கணவா் வள்ளியப்பனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது குளத்துப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த இரு சக்கரவாகனம் மோதி நிலைத்தடுமாறி இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனா். தொடா்ந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்யாணி புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். ஆனால் அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இருந்தன. இதையடுத்து அந்த உறுப்புகளைத் தானமாகப் பெற அவரது குடும்பத்தினரிடம் மருத்துவக் குழுவினா் விடுத்த வேண்டுகோளின்பேரில் அவா்கள் உறுப்பு தானம் அளிக்க சம்மதித்தனா். உடனே மருத்துவமனை நிா்வாகம் தமிழக அரசிடம் உடல் உறுப்பு தானத்திற்கு அனுமதி பெற்று, சுமாா் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து கல்யாணியின் உடல் உறுப்புகளை சேகரித்தனா்.

இதில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து கல்யாணியின் உடல் வியாழக்கிழமை குளத்துப்பட்டி கொண்டு வரப்பட்டு உறவினா்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கல்யாணியின் மகன் நாகராஜன் தெரிவித்தது:

இதுபோன்ற உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணா்வை தமிழகம் முழுவதும் மக்கள் பெறவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT