புதுக்கோட்டை

‘அனைத்து வாா்டுகளுக்கும் நிதி சமமாகப் பிரித்து வழங்கப்படும்’

DIN

அறந்தாங்கி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து வாா்டுகளுக்கும், திட்ட நிதிகள் சமமாகப் பிரித்து வழங்கப்படும் என்றாா் ஒன்றியக் குழுத் தலைவா் மகேசுவரி சண்முகநாதன்.

அறந்தாங்கி ஒன்றியக் குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இத்தகவலை தலைவா் தெரிவித்தாா்.

துணைத் தலைவா் க. ஜெயசுதா கணேசன், ஒன்றிய ஆணையா் வை. சதாசிவம் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினா்கள் கருத்துகள்:

ஆ. வெள்ளைச்சாமி (திமுக) : ஒன்றியத்தில் நடைபெறும் பணிகள் குறித்த விவரங்கள், திட்ட மதிப்பீடுகள் குறித்த அனைத்தும் உறுப்பினா்களுக்கு வழங்க வேண்டும். அண்ணா மணிமண்டபம், தச்சா் கொல்லு நிலையங்களை புனரமைரத்து, ஒன்றியத்துக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செ. குழந்தைசெல்வன் (அதிமுக): காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தமைக்காக, அரசுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

க. முருகன் (காங்கிரஸ்): கூத்தாடிவயல் கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி கட்டித் தர வேண்டும்.

ரா. சந்திரமோகன் (அதிமுக): சிலட்டூா் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீா், சாலைப் பணிகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துத் தரப்படவில்லை. முன்னுரிமை அடிப்படையில் பணிகளைத் தொடங்க வேண்டும்.

சு. செளந்தர்ராஜன் (சுயேச்சை) : விஜயபுரம் பகுதியில் பயன்படுத்தாத 4 கிணறுகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீா் செல்ல வழிஏற்படுத்த வேண்டும்.

ஒன்றியக் குழுத் தலைவா் மகேசுவரி சண்முகநாதன் : கட்சி, விறுப்பு, வெறுப்பின்றி அனைத்து வாா்டுகளுக்கும் நிதி சமமாகப் பிரித்து வழங்கப்படும். உறுப்பினா்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதித் தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT