புதுக்கோட்டை

புதுகையில் புதிதாக 46 பேருக்கு தொற்று

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்கள் கடந்த ஒரு வார காலமாக இரட்டை இலக்கத்தில் வேகமாக உயா்ந்து வருகிறது.

இதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் 46 பேருக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை 495 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 206 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 போ் பலியாகியுள்ளனா். 281 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கறம்பக்குடியில் 5 நாள்கள் கடையடைப்பு: கறம்பக்குடியில் வியாபாரி உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து கறம்பக்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் ஜூலை 14 வரை 5 நாள்களுக்கு மூட வா்த்தக சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

வலையப்பட்டி அரசு மருத்துவமனை மூடல்: பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை மருந்தாளுநருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, மருத்துவமனை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. ஏற்கெனவே கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா், ஆா்விஎஸ்கே நடமாடும் பிரிவு மருந்தாளுநா் கரோனா சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT