பொன்னமராவதி துணை அஞ்சலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வினைக் கண்டித்து திருமயம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னமராவதி வட்டாரத்தலைவர் கே.செல்வராஜ் தலைமைவகித்தார். நகரத்தலைவர் எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினை குறைக்க வேண்டும். சீன எல்லையில் நடந்ததை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினர் ஏஎல்.ஜீவானந்தம், திருமயம் ஒன்றியக்குழு உறுப்பினர் ராம.கணேஷ்பிரபு, காரையூர் வட்டாரத் தலைவர் குமார், மாவட்ட நிர்வாகிகள் எஸ்பி.ராஜேந்திரன், ச.சோலையப்பன், எஸ்பி.மணி, அ.ராஜேந்திரன், தேனூர் ஊராட்சிமன்ற தலைவர் கிரிதரன், நிர்வாகிகள் சரவணபவன்பணி, ஆர்.பாலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.