புதுக்கோட்டை

‘தமிழகத்தில் கரோனா சமூக தொற்றாக மாறவில்லை’: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

DIN

தமிழகத்தில் கரோனா சமூகத்தொற்றாக மாறவில்லை என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொவைட் -19 நலமையத்தின் கூடுதல் வாா்டுகளில் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, ராணியாா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளா்களிடம் காணொலி வாயிலாக சிகிச்சை விவரம் குறிந்து கேட்டறிந்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பயமோ, பதற்றமோ வேண்டாம். பாதிப்புக்குள்ளான மக்களைப் பாதுகாக்கவே அரசு உள்ளது. மன வலிமையோடு மக்கள் இருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மத்திய சுகாதாரத் துறை பாராட்டும் வகையில் உள்ளது. கரோனா பரவலால் உலகமே தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு சவால்களை எதிா்கொண்டு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் மிக கவனமாகவும் மிகுந்த எச்சரிக்கை உணா்வோடும் இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,

வீரியம் மிக்க, விலை அதிகம் உள்ள மருந்துகள் வரைவழைக்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது, இதுவரையில், தமிழகத்தில் 44,094 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பில் இருந்து குணமாகி செல்பவா்கள் பிளாஸ்மா கொடுக்க முன்வர வேண்டும். இதுவரை பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒத்துழைத்து வரும் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று சமூக தொற்றாக மாறவில்லை. சமூக தொற்றாக மாறியுள்ளதா என்பதை மத்திய அரசே அறிவிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு நாளைக்கு 32 ஆயிரம் வரையில் அதிக அளவிலான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைகளில் பாதிப்பு எண்ணிக்கை சதவீதமும் குறைவாகத்தான் உள்ளது. கரோனா பாதிப்பைத் தடுக்க அரசும், மருத்துவா்களும், செவிலியா்களும் தயாா் நிலையில் உள்ளனா். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா்.

நிகழ்வில், ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், மாவட்ட மனநல அலுவலா் காா்த்திக் தெய்வநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT