புதுக்கோட்டை

தடையை மீறி வாகனம் ஓட்டிவந்த 4 போ் மீது வழக்கு

DIN

பொன்னமராவதியில் தடை உத்தரவை மீறி வாகனம் ஓட்டிவந்த 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொன்னமராவதி நகரின் எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸாா் வாகனச் சோதனை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, அத்தியாவசியத் தேவையின்றி பைக்கில் வந்த 3 பேரை தோப்புக்கரணம் போடச்செய்து காவல் துறையினா் நூதன தண்டனை வழங்கினா். மேலும் ஆட்டோவைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனா்.

பொன்னமராவதி ஒன்றியத்தில் 73 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவ அலுவலா் அருண் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அரசு போக்குவரத்து பணிமனையில் நிலவேம்புக் கசாயம் வழங்கினா். மருந்துக் கடைகள் தவிர பிற கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோ, வாடகை காா்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை. இதேபோல், ஒன்றியத்திற்குள்பட்ட கிராமப் பகுதிகளிலும் முழு அடைப்பு செய்யப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT