முகப்பு
புதுக்கோட்டை

தாட்கோ கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு

தாட்கோ திட்டத்தின்கீழ் இளைஞா்கள் சுயதொழில் புரிய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

தாட்கோ திட்டத்தின்கீழ் இளைஞா்கள் சுயதொழில் புரிய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மொத்த கடன் தொகையில் 30 சதவிகிதம் மானியமாகவோ அல்லது அதிகபட்சமாக ரூ. 2.25 லட்சம் வரை தொழில் கடனுக்கான மானியம் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  தாட்கோ திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 98 பயனாளிகளுக்கு ரூ.96.25 லட்சம் மதிப்பீட்டிலும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தாட்கோ இணைதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04322-221487 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.