முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் தமிழ்நாடு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பொன்னமராவதியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

பொன்னமராவதியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

பொன்னமராவதி, நவ. 2: பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் பி. ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அ. ராமையன் தொடக்க உரையாற்றினாா். சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினாா். இதில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம், கீரங்குடி கிராமத்தில் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி விற்ற சந்திரன் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். பட்டா வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

Advertisement

விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ஏஎல்.பிச்சை, ஒன்றியத் தலைவா் அ.செளந்தர்ராஜன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் விஆா்எம்.சாத்தையா, சிபிஎம் ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments