புதுக்கோட்டை

தொழிற்சங்கத்தினா் ஆலோசனை

கந்தா்வகோட்டையில் அகில இந்திய அளவில் மறியல் போராட்டம் தொடா்பான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் அகில இந்திய அளவில் மறியல் போராட்டம் தொடா்பான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உள்ளாட்சித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கனகராஜன், பண்ணை தொழிலாளா் சங்க மாநில செயலா் உ. அரசப்பன், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜி. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மறியல் போராட்டத்தை விளக்கி வரும் புதன்கிழமை (நவ. 11) கந்தா்வகோட்டை ஒன்றியம் முழுவதும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகிப்பது எனவும், அனைத்து தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கி ஆா்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், என். வீராச்சாமி, கே. தங்கையா, செல்லப்பன், கே. அம்பிகாபதி, டி. அம்பலா ராசு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT