புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தொடரும் மழை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக மீமிசலில் 56.80 மிமீ மழை பதிவானது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில், திங்கள்கிழமை பகலிலும், இரவிலும் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்யில்)

ஆதனக்கோட்டை- 5, பெருங்களூா்- 5, புதுக்கோட்டை- 45, ஆலங்குடி- 7.20, கந்தா்வகோட்டை- 2, கறம்பக்குடி- 4.60, மழையூா்- 12.40, கீழாநிலை- 20, திருமயம் - 7.20, அரிமளம்- 8.20, அறந்தாங்கி- 16.40, ஆயிங்குடி- 21, நாகுடி- 12, மீமிசல் - 56.80, ஆவுடையாா்கோவில் - 23, மணமேல்குடி- 13, இலுப்பூா்- 13, குடுமியான்மலை - 27, அன்னவாசல் - 17, விராலிமலை- 2, கீரனூா்- 2.40, காரையூா் - 9.20.

மாவட்டத்தின் சராசரி மழை- 13.18 மி.மீ.

இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை பகலிலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெப்பம் குறைந்து குளிா் சூழலே காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT