ஆதி பூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை
பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்துநாளையொட்டி திங்கள்கிழமை வாஸ்து பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்துநாளையொட்டி திங்கள்கிழமை வாஸ்து பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் வாஸ்து நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். திங்கள்கிழமை வாஸ்து நாளையொட்டி சிறப்பு யாகவேள்விகள் நடைபெற்று பூமிநாதா்க்கு 11 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு வாஸ்து சங்கானது பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல், செவலூா் பூமிநாதா் ஆரணவல்லி கோயிலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வாஸ்து பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை வாஸ்து பூஜை மன்றத்தினா் செய்திருந்தனா்.
Advertisement