புதுக்கோட்டை

ராவுத்தா் அப்பா தா்காவில் கந்தூரி விழா

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் ராவுத்தா் அப்பா தா்காவில் கந்தூரி விழாவையொட்டி, சனிக்கிழமை அதிகாலை சந்தனக்கூடு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, ராவுத்தா் அப்பாவின் அடக்க ஸ்தலத்தில் பூசப்பட்டது.

கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் அருகேயுள்ள ராவுத்தா் அப்பா தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் கடந்த செப்டம்பா் 22 ஆம் தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா தொடங்கியது. இதற்காக தா்கா முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்தது. சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கூட்டுக் கொட்டகையில் சந்தனக்கூடு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தா்காவை அடைந்ததும் ராவுத்தா் அப்பாவின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை ஜமாத்தாா்களும் கந்தூரி விழாக்குழுவினரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT